மயிலாடுதுறை மக்களின் சாபக்கேடான பாதாள சாக்கடை திட்டம்

Advertisements

மயிலாடுதுறை மக்களின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறியிருக்கிறது பாதாள
சாக்கடை திட்டம். சாலைகளில் வழிந்து ஓடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேட்டின்
பிறப்பிடமாகவே மாறிவருகிறது. 36 வார்டுகளை கொண்ட மயிலாடுதுறை
நகராட்சியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகரத்தின் சுகாதாரத்தை
மேம்படுத்துவதற்காகவும், போக்குவரத்து நெரிசலை தீர்க்கவும் 48 கோடி மதிப்பீட்டில்

Advertisements

பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2007 ஆம் ஆண்டு முதல்
செயல்பட்டிற்கு வந்தது.பாதாள சாக்கடை திட்டம் துவங்கிய நாளில் இருந்தே
பிரச்சனைகளும் ஆரம்பித்துவிட்டது.
பாதாளசாக்கடைத் திட்டத்தின் படி நகரின் கழிவு நீர் அனைத்தும் பிரதான குழாய்கள்
மூலம் மன்னம்பந்தல் தனியார் கல்லூரிக்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு
தொட்டிக்கு கொண்டு சென்று, அங்கு சுத்திகரிக்கப்பட்டு அதனை சாகுபடி
பயன்பாட்டிற்கு அனுப்பவேண்டும். ஆனால் அப்படியொரு செயல்பாடே இல்லாமல்,
சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லாமல், பிரதான பாசன வாய்க்காலான
சத்தியவான் வாய்க்காலில் திறந்தவிடப்பட்டு விவசாயத்தையும் கேள்விக்குறியாக்கி
வருகின்றனர்.கழிவுநீர் வாய்க்காலில் விடுவதை கண்டித்து ஆறுபாதி உள்ளிட்ட
சுற்றுவட்டார பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து போராட்டம்
நடத்திவருகின்றனர்.
கழிவுநீர் தடையின்றி செல்லுவதற்காக எட்டு இடங்களில் பம்பிங் செக்ஸன்
நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் அங்கிருந்த மோட்டார்கள் பழுதடைந்து
போனபிறகு புதிய மோட்டார் வாங்கி பொருத்தாமல், வாடகை என்கிற பெயரில்
ஜெனரேட்டர் கொண்டுவந்து அதன் மூலம் பம்பிங் செய்யும் பணி அவ்வப்போது
நடந்துவருகிறது.
புதிய தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வந்திருந்த போதிலும் அதனை
பயன்படுத்தாமல் பழையமுறையிலேயே பம்பிங் செய்யப்படுவதால் நகரின் பல
இடங்களில் ஆழ்நுழைவு தொட்டிகளின் வழியாக கழிவு நீர் வெளியேறி, குடியிருப்பு
பகுதிகளிலும் சாலைகளிலும் சாக்கடையாக தேங்கி பொதுமக்களை அச்சுறுத்தி
வருகிறது.
இந்த பாதாள சாக்கடை திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இடங்களில்
சாக்கடைக் குழாய்கள் உடைந்து, மண்ணறிப்பு ஏற்பட்டு சாலைகள்
உள்வாங்கிவிட்டது. அதனால் அவ்வப்போது விபத்துகளும் நடந்துவருகிறது. வாகன
ஓட்டிகளும், பாதசாரிகளும், பொதுமக்கள் சொல்லமுடியாத சிரமத்திற்கு
உள்ளாகிவருகின்றனர்.மழைக்காலங்களில் கல்லூரி, பள்ளி பேருந்துகள் உள்வாங்கிய
சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.
கச்சேரிரோடு, கண்ணாரத்தெரு, தரங்கம்பாடி சாலை, ஐயாரப்பர் மேல வீதி,
திருவிழந்தூர் என மக்கள் அதிகம் நடமாட்டமும், வசிக்கும் பகுதிகளில் கழிவுநீர்
வழிந்தோடி சாலைகளில் குளம்போல் மாறி நாரிக்கிடக்கிறது. நகரத்தில் 30க்கும்

மேற்பட்ட இடங்களில் ஆள்நுழைவு மூடிகள்உடைந்து கழிவுநீர் சாலைகளில்
ஓடுகிறது. நகரத்தின் மையமான அவையாம்பால்புரம் பகுதியில் பம்பிங் செக்சனில்
பம்பிங் செய்யும்போது, அந்த பகுதியில் ஆள்நுழைவு மூடிகள் உள்ள பகுதிகளில்
உடைந்து அதன்வழியாக கழிவுநீர் வெளியேறி யாரும் நடக்கக்கூட முடியாதபடி
சாக்கடையாக மாறியிருக்கிறது.
.”சாலைகளில் உடைப்படுக்கும் அனைத்து இடங்களுமே மருத்துவமனைகள்,
வங்கிகள், வணிக நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் என பிரதானமான இடங்களாக
இருப்பதால் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் வந்துசெல்வதில் மிகுந்த
சிரமப்படுகின்றனர்.
நகர்மன்ற தேர்தல் முடிந்து தலைவர்கள் கவுன்சிலர்கள் பதவியேற்று ஓர்
ஆண்டுகளை கடந்துவிட்டது, மக்களின் பிரதான பிரச்சனையான பாதாள சாக்கடை
பிரச்சனைக்கு தீர்வு கானாமல் லாபத்தை மட்டுமே பார்க்கிறார்கள். சாலைகளில்
கழிவு நீர் தொடர்ந்து ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு தமிழக முதல்வர்
நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்கிறார்கள் பொதுமக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *