விஜய்யின் சமீபத்திய செயல்பாடுகள் மக்கள் மற்றும் ரசிகர்களை தாண்டி அரசியல் கட்சிகளையும் சற்று உற்று நோக்க வைத்துள்ளது.தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.இதில் விஜய்யே களத்தில் இறங்கினார்.இந்த நிகழிச்சியில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் பற்றியும்,விஜய்யின் செட்டிலான அரசியல் உரை பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இரத்த தானம் ,அம்பேத்கருக்கு மாலை அணிவிப்பதில் துவங்கி உலக பட்டினி தினத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது வரை தற்போழுது கூடுதலாக விஜய்யே களத்தில் இறங்கி மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் சம்பவங்களை பார்த்தல் .இதை சேவை மனப்பான்மையாக எடுத்துக்கொள்வதை விட அரசியல் நோக்கமாகவே பார்க்கப்படுகிறது.குறிப்பாக நேற்றைய நிகழ்ச்சியில் விஜய்யின் உரை தன்னுடைய அரசியல் பயணத்தின் முன்னுரையாகவே கருதப்படுகிறது.
அம்பேத்கார்,பெரியார் ,காமராஜர் இவர்களை நாம் படிக்கவேண்டும் என விஜய்யின் வார்த்தைகள் முக்கியமானதாக ஒன்றாக எடுத்துக்கொண்டாலும் இதை வெவ்வேறான
கோணங்களில் பார்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அம்பேத்கார்,பெரியார் என்றாலே சிலரின் காதுகளுக்கு எரிச்சலை உண்டுபடுத்தும்..அப்படி விஜய்யின் உரை நேற்று மதியம் தொட்டு தற்போழுது வரை பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது என்றே சொல்லலாம்.
முதல் தலைமுறை வாக்காளர்களை கைவசம் படுத்துவாரா விஜய்?
இளம் தலைமுறையினரின் கனவு நாயகனாக நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை .நடிகர் விஜய்யின் மார்க்கெட் அதேபோல நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.நடிகர் விஜய் எதை செய்தாலும் அனைவராலும் கவனிக்கப்படுகிறது.இதை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் முதல் தலைமுறை வாக்காளர்களை குறிவைக்கிறது என அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக அமைந்துள்ளது.அதற்க்கு காரணம் தன்னுடைய உரையில் கல்வியை சார்ந்து பேசுகையில் சற்று மெல்லிய இடைவெளிவிட்டு அரசியலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பற்றியான விமர்சனத்தையும்..,முதல் தலைமுறையினரின் வாக்கின் முக்கியத்துவத்தை பற்றியும் பேச தொடங்கினார்.நடிகர் விஜய்யின் பட இசை வெளியிட்டு விழாக்களில் மட்டும் கலந்து கொள்ளும் விஜய் தற்போழுது களத்தில் இங்கிருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.நேற்றைய நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய்யின் வார்த்தைகளும் செயல்பாடுகளும் அடுத்தடுத்தாக வேகமெழும் என சினிமா வட்டாரங்களிலம் அரசியல் வட்டாரங்களிலும் பேசப்படுகிறது .