தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு.!

Advertisements

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisements

 சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ,  தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ,  நாளை புயல் உருவாகும் என்று தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக அடுத்தடுத்த  நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று நாளை  முதல் 14 ஆம் தேதி வரை  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.  மேலும்  சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *