Advertisements

சென்னை :
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில், மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில், மழைக்கு வாய்ப்புள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 30- 40 கி,மீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisements
