
சென்னையில் ஜூன் 5 ந்தேதி நடைபெறும் கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருகைதர இருந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மூ .கருணாநதியின் பெயரில் கிண்டியில் புதிதாக பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது .230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது இந்த புதிய பல்நோக்குமருத்துவமனையின் திறப்பு விழா வருகின்ற ஜூன் 5 ந்தேதி நடைபெறஉள்ளது . இந்த திறப்பு விழாவில் பங்கேற்குமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை டெல்கியில் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் .இன்நிலையில் கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருகைதர இருந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . அவர் வெளிநாடு செல்லவிருப்பதால் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
