கடன் வாங்கி குடும்பம் நடத்துவதில் தமிழ்நாடு நம்பர் ஒன்

Advertisements

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்பார்கள் .அதில் கடனும் ஒன்று .கடன் இல்லாமல் இன்றைய காலகட்டத்தில் கோடீஸ்வரர்களாலும் கூட வாழ முடியாது.

Advertisements

 நீரின்றி அமையாது உலகு என்ற பழமொழியை கடன் இன்றி அமையாது வாழ்க்கை என்று கூட மாற்றிச் சொல்லலாம். அந்த வகையில் ஒவ்வொரு தனி மனிதரும் கடன் என்னும் கடலில் தான் நீந்திக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்தியாவை பொருத்தமட்டில் இன்றைய தேதியில் 150 லட்சம் கோடி கடன் வாங்கி பாரதத்தை ஆண்டு கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி .கடந்த 10 ஆண்டுகளாகவே இந்தியாவில் கடன் தொல்லை அதிகரித்துக் கொண்டே போகிறது

 இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் எவ்வளவு பணம் கடன் வாங்கி இருக்கிறது என்ற பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் கடன் வாங்கி காலம் கழிப்பதில் தமிழ்நாடு தான் நம்பர் ஒன் மாநிலமாக திகழ்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கடந்த 2020 -21 நிதியாண்டில் தமிழ்நாடு 87 ஆயிரத்து 977 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தது .இதன் பின்னர் கடந்த 2021 -22ல் 87 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தது .இந்த நிலையில் கடந்த 202-23 நிதி ஆண்டில் தமிழ்நாடு 68 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறது இந்த புள்ளி விவரப்படி இந்திய மாநிலங்களில் அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே இந்த நிலை நீடித்து வருகிறது .தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திர மாநிலம் 51 ஆயிரத்து 860 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது .அதிக கடன் வாங்கும் மூன்றாவது மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது .இதே போல் அரியானா குஜராத் ஆகிய மாநிலங்களும் அதிக அளவு கடன் வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *