தமிழக அமைச்சரவையில் மாற்றம்- பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம்..!

Advertisements

தமிழக அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்களை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருப்பதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இன்று மதியம் மூத்த அமைச்சரான துரைமுருகன், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து இதுபற்றி பேசப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை அமைச்சர் துரைமுருகன் மறுத்தார்.

Advertisements

இந்நிலையில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 11ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அவர் பதவியேற்ற பிறகு இலாகா மாற்றம் குறித்த தகவல் வெளியாகும்.

One thought on “தமிழக அமைச்சரவையில் மாற்றம்- பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *