தமிழக கோவில்கள் – ஒரு புள்ளி விவரம்

Advertisements

தமிழ்நாட்டில் மொத்தம் 46,022 திருக்கோயில்கள் இருக்கின்றன. இதில்
பட்டியலிடப்பட்ட திருக்கோயில்களின் எண்ணிக்கை 9,190.பட்டியலிடப்படாத
திருக்கோயில்களின் எண்ணிக்கை 36,832. இந்தப் பட்டியலில் சமணத்
திருக்கோயில்கள் (22), திருமடங்கள் (45), திருமடத்துடன் இணைந்த கோயில்கள் (68),
அறக்கட்டளைகள் (1,264), குறிப்பிட்ட அறக்கட்டளைகள் (1,127) ஆகியனவும் அடங்கும்.
இந்து சமய திருக்கோயில்களுக்குச் சொந்தமாக 4,78,283.59 ஏக்கர் பரப்பளவுடைய
நிலங்கள் உள்ளன. கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை 1,23,729
குத்தகைதாரர்கள் பயிர்செய்து வருகின்றனர். இந்தத் துறையோடு இணைந்த
கல்லூரிகளும், பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 6
கல்லூரிகளும், 48 பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *