ஊசி மூலம்  ரசாயன வண்ணம்  கலந்த  தர்பூசணியை  விற்பனை செய்தால் கடும்நடவடிக்கை..!    

Advertisements

கோடை வெயில் வாட்டி வதைக்கும்  நிலையில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்புகளை தடுக்கவும், தாகத்தை தணிக்கவும் தர்பூசணி மிகவும் சிறந்ததாகஉள்ளது  . சென்னையில் கடைகள் மற்றும் சாலையோரங்களில் தர்பூசணி குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ தர்பூசணி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டாலும்  பொதுமக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க தர்பூசணியை வாங்கி சாப்பிட்டும்   ஜூஸ் போட்டும் குடிக்கிறார்கள். வெயிலுக்கு இதமான பழமாக கருதப்படும் தர்பூசணியிலும் தற்போது கலப்படம் வந்துவிட்டதாக புகார் வந்துள்ளது . சிலர் தர்பூசணியில் பழத்தின் உள்புற வண்ணம் நன்றாக சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அதில் செயற்கையாக ரசாயன வண்ணம் சேர்க்கப்படுவதாகவும் .அதற்காக  சிவப்பு நிற ரசாயன வண்ணத்தை தண்ணீரில் கலந்து அதை ஊசி மூலம் தர்பூசணிக்குள்    செலுத்துவதால் பழத்தின் உள்புறம் நன்றாக சிவப்பாக மாறுகிறது. இதனால் நன்றாக பழுத்து இருப்பதாக நினைத்து பொதுமக்களும் அதை சாப்பிடுகிறார்கள்.என்றும்  செயற்கை வண்ணம் கலந்த தர்பூசணியை சாப்பிடும்போது முதலில் நாக்கு சிவப்பாக மாறும், வயிறு உப்பிசம், வயிற்றுவலி, வாந்தி, மூச்சிரைப்பு, டயாரியா, வலிப்பு, கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் . உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழக்க நேரிடும் என்று .

Advertisements

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்  மேலும் தர்பூசணியில்      பழத்தை வெள்ளை நிற கை துடைக்கும் காகிதத்தால் துடைத்து பார்த்தால் அதில் ரசாயன வண்ணம் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த காகிதத்தில் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து காணப்படும் என்றும் . அதை வைத்து அந்த பழத்தில் செயற்கை வண்ணம் சேர்த்திருப்பதை கண்டறிய முடியும்என்றும் ரசாயன வண்ணம் சேர்க்காத பழம் என்றால் காகிதத்தில் வண்ணம் ஒட்டாது.என தெரிவித்துள்ளஉணவு  பாதுகாப்புத்துறை அதிகாரிகள்   பொதுமக்கள் வாங்கும் தர்பூசணியில் ரசாயன வண்ணம் சேர்க்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.என்றும்  அந்த பழத்தை மாதிரியாக எடுத்துக் கொண்டு அதை ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டு  அதில் ரசாயன வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தால் உடனடியாக அந்த கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்துள்ளனர் .          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *