கோர ரெயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று கட்டுப்பாட்டு அறையில் ஆய்வுக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஒடிசா கோர ரெயில் விபத்து நாட்டு மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும், அங்கு சென்றுள்ள அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் களப்பணி ஆற்றுவரர்கள் என்று தெரிவித்;தார்.
மேலும், விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.