ஒடிசா ரயில் கோர விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மீட்பு பணிகள் உதவும் பொருட்டு அமைச்சர்கள் உதயநிதி, சிவசங்கர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு ஒடிசா சென்றடைந்தது. இநு;து குழுவினர் அம்மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து தமிழக பயணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்து அவர்களை பற்றி தகவல்களை சேகரித்து உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் தமிழக பயணிகளை பார்த்து ஆறுதல் கூறியதோடு, தமிழக பயணிகள் குறித்து முழு விவரங்களை பெற்று அவர்கள் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்புப் பணிகளில் உதவும் பொருட்டு தமிழ்நாடு குழு ஒடிசா சென்றடைந்தது..!
Advertisements