
பேனா நினைவுச் சின்னம் கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அரசு சார்பில் அவருக்கு நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலுக்கு நடுவில் 81 கோடி ரூபாய் செலவில் சுமார் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதனை அடுத்து மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் “கருணாநிதி நினைவிடம் மற்றும் பேனா நினைவுச் சின்ன கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சிறப்பு அதிகாரியாக ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

