
அயர்லாந்து-வங்கதேசம் இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
அயர்லாந்து-வங்கதேசம் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய அயர்லாந்து 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. மேலும் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது. இதன் காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.

இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என அயர்லாந்து கைப்பற்றி இருந்தால் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றிருக்கும். தற்போது வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக நடைபெறாத காரணத்தால் உலகக்கோப்பைக்குக் தென் ஆப்பிரிக்கா அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
