சோனியா காந்தி தேர்தல் பரப்புரையில் பேசிய விவகாரம்..!தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்..

Advertisements

முன்னால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே புகார் அளித்துள்ளார்.

Advertisements

கடந்த சனிக்கிழமை ஹூப்ளியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முன்னால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார்.
அப்போது பேசிய அவர், கர்நாடகத்தின் நற்பெயருக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த யாரையும் காங்கிரஸ் அனுமதிக்காது என தெரிவித்துள்ளார்.


இது குறித்து, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே புகார் அளித்துள்ளார்.
அதில், இறையாண்மை என்பது ஒரு நாட்டுடன் தொடர்புள்ள நிலையில், கர்நாடகா இறையாண்மை என சோனியா காந்தி குறிப்பிட்டு பேசியதன் மூலம் பிரிவினைவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சோனியா காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *