பிரபல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சமீபத்தில் பிரதமர் மோடியைப் பற்றி
பேசும் பொழுது அவரை விஷ பாம்புடன் ஒப்பிட்டு பேசினார் .மோடி ஒரு விஷப்பாம்பு
போன்றவர் .அது உயிரையே பறித்து விடும் என்று கூறியிருந்தார்
இதற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இதற்கு விளக்கம் அளித்த மல்லிகார்ஜுன் கார்கே நான் பிரதமரை பற்றி
சொல்லவில்லை. பாஜகவை பற்றித்தான் சொன்னேன். தனிப்பட்ட முறையில் நான் யாரையும் விமர்சிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்தம் அப்படி இருக்கிறது.
இதைத்தான் நான் பேசினேன் என்று அவர் கூறினார்
இந்த நிலையில் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடையில் பேசிய பாஜக
எம்எல்ஏ பசனகவுடா பாட்டில். சோனியா காந்தியை பற்றி குறிப்பிடும் பொழுது அவர் ஒரு
விஷககன்னி என்றார். கர்நாடக மாநிலம் கொப்பலில் உள்ள அட்மா என்ற இடத்தில்
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பசனகவுடா மோடியை நாகப்பாம்புடன் ஒப்பிட்டு அவர்
விஷம் கக்குவார் என்று சொல்கிறார்கள். நான் சொல்கிறேன் சோனியா காந்தி ஒரு
விஷப்பெண் அவர் ஒரு விஷக்கன்னி என்று கூறினார் .
இதனை அடுத்து அவரது பேச்சுக்கு கர்நாடகாவில் மிகப்பெரிய எதிர்ப்பு ஏற்பட்டு
இருக்கிறது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் பேசும்போது பெண்கள் மீதும்
தாய் மீதும் உங்களுக்கு மரியாதை இருந்தால் பசனகவுடா பாட்டிலை கட்சியிலிருந்து
நீக்க வேண்டும் .சோனியா காந்தி இந்தியாவின் மிகப்பெரிய பெண்மணி தனக்கு பிரதமர்
பதவி கிடைத்த போதும், அதனை மறுத்து மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கி 10
ஆண்டுகள் இந்தியாவை வளமாக்கினார். அப்படிப்பட்டவரை விஷக்கன்னி என்று
பேசியது தவறு. உடனடியாக அவர் பதவியில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று
கூறி இருக்கிறார்
விஷக்கன்னி சோனியா, மோடி விஷப்பாம்பு: காங் -பாஜக போடும் புதிய சண்டை
Advertisements