துன்புறுத்தப்பட்டாரா செந்தில் பாலாஜிசோதனையில் நடந்தது என்ன?

Advertisements

சுமார் 17 மணி நேர சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து அமலாக்கத்துறை கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

Advertisements

மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டையடுத்து, சென்னை மற்றும் கரூரில் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு கட்ட சோதனைகளை அமலாக்கத்துறை நடத்தியது.
இந்நிலையில், நேற்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து, தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
சுமார் 17 மணி நேர அமலாக்கத்துறை சோதனைக்குப்பின் நள்ளிரவு 12.30 மணிக்கு மேல், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்து துறை முறைகேடு புகாரை விசாரிக்கும் அதிகாரி கார்த்திக் தேசாரி அமைச்சர் இல்லத்திற்கு வந்தார்.
பின்னர், அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் படுக்க வைத்து அழைத்து செல்லும் வழியில், அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறியதோடு கதறி அழுதார்.
இதனைதொடர்ந்து, அமைச்சர் செந்தில்பாலாஜி ஓமந்தூரார் பன்னோக்கு மருத்தவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டது.

2.அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளதை அடுத்து, சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்திலும் சோதனை நடைபெற்றது.
மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வந்த நிலையில், அதிகாலை 2 மணியளவில் நிறைவடைந்தது.
இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிகாரிகள் அழைத்துச் சென்றபோது, அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனைதொடர்ந்து, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர், அமைச்சர் செந்தில்பாலாஜியை காண மருத்துவமனைக்கு விரைந்தனர்.
மேலும்,சோதனையின்போது, தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் இருந்து 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த சூழலில், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் கைதுசெய்யப்பட்டுள்ளதை சட்ட ரீதியில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், இந்த பிரச்சினையை சட்டப்படி எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

3.அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலஜிக்கு எதிராக 17 நேரத்துக்கும் மேலாக அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, அமைச்சர் செந்தில் பாலஜிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலஜியை சந்திக்க விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல அமைச்சர்கள் ஓமந்தூரார் மருத்துவனைக்கு வந்தனர்.
அமைச்சர் செந்தில் பாலஜியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,.
பாஜக அரசின் உருட்டல் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது என்றும், திராவிட முன்னேற்றக் கழகம் மிசாவையே பார்த்தது என ஆவேசமாக தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்றும் அவர் கூறினார்.

4.அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும், அவரது காது பகுதியில் வீக்கம் இருப்பதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் 17 மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.
அமலாக்கத் துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட இருந்த நிலையில், நெஞ்சுவலியால் கதறி அழுத அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில், சுகாதாரத் துறை அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து, செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, சுயநினைவின்றி அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது பெயரைச் சொல்லி மூன்று முறை அழைத்த போதும், அவர் சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு,
அமலாக்கத்துறை விசாரணையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்‌ என்றும், அவரது காது பகுதியில் வீக்கம் உள்ளதாகவும், இசிஜி சீராக இல்லை எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த கைது விவகாரத்தை சட்டரீதியாக திமுக எதிர்கொள்வோம் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *