அனுமனுக்காக ஒரு இருக்கை..!

Advertisements

கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபாஸ் நடிக்கும் ஆதிபிருஷ் திரைப்படத்தின் டீஸர் வெளியானது.வெளியான சில மணிநேரங்களில் பெரும் பேசும்பொருளாக சர்சைக்குரியதாகவும் அமைந்தது ஆதிபிருஷ் டீஸர்.
பாகுபலிக்கு அப்புறம் பிரபாஸ் கன்னிகளின் பசிக்கு தகுந்த விருந்தோம்பல் இருக்கும் என காத்திருந்தவர்களுக்கு வந்ததோ…பெரிய அடி,காரணம்…படத்தின் vfx தான்.பிரம்மாண்டமான ராமாயணத்தை உருவாக்குறிங்கன்னு சொல்லிட்டு என்னடா வீடியோ கேம் ல வர்ற அனிமேஷன் பொம்மை மாதிரி பண்ணி வெச்சுருக்கீங்கன்னு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கினார்கள் .உண்மையில் சொன்னால் நெட்டிசன்களுக்கு தான் பெரிய விருந்தாக இருந்தது ஆதிபிருஷ்.குறிப்பாக டீசர் வந்தவுடன் அதில் வரும் பிரபாஸ் முகத்தையும் சீமான் முகத்தையும் ஒப்பிட்டு ஒருபோல இருக்கிறது என்று நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கினார்கள் . இப்படி ஒரு பக்கம் போக படத்தின் இயக்குனர் ஓம் அவரை கோபமாக பிரபாஸ் தன் அரைக்கும் அழைப்பது போன்ற விடியோவும் விருந்தோம்பலின் sidedish-ஆக அமைந்தது.

Advertisements

அதன் பின் மாற்று சீரமைப்பு செய்து மீண்டும் வெளிவந்த ஆதிபிருஷ் டீசர் பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும் .இறுதியாக ஆதிபிருஷ் படமும் தயார் நிலையில் வரும் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவருகிறது.பல நாட்களுக்கு பின் மீண்டும் உயிர்ப்பித்த ஆதிபிருஷ்க்கு பல வகையில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர் படக்குழுவினர்.

அதன் ஒரு பகுதிகளாக கோவில்களில் பூஜை என ஆன்மீகத்தின் உச்சகட்ட்டத்திலேயே ப்ரோமோஷன்களை செய்து வருகின்றனர்.ஆதிபிருஷ் படக்குழுவினரிடமிருந்து வந்த ஒரு அறிவிப்பு மொத்த இந்திய சினிமா அல்ல உலக சினிமா துறையையே திரும்பி பார்க்க வைத்தது,அப்படி ஓர் அறிவிப்பு தான் இந்தியா முழுவதும் ஆதிபிருஷ் திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் ஒரு இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும்.காரணம் அனுமனுக்காக அந்த சீட் விடப்படும் என்ற அறிவிப்பு ஆதிபிருஷ் மீண்டும் உயிர்ப்பித்ததை போல நெட்டிசன்களும் உயிர்ப்பித்தார்கள்..ஒரு இருக்கை அல்ல எல்லா இருக்க்கைகளும் காலியாகத்தான் இருக்க போகிறது என்று விமர்சித்து வருகிறார்கள்.இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *