ஜப்பானில் “RRR” செய்த சாதனை! 200 நாட்களில் கலெக்சன் இவ்வளவா? 

Advertisements

பாகுபலி 1&2 ஓட அசுரத்தனமான வெற்றிகளுக்கு அப்பறம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பாக்க வச்சாரு பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி. இதுக்கு அப்பறம் எந்த மாதிரி கதைகளத்துல படத்த கொடுக்க போறாரு அப்படினு பலரும் எதிர்பார்த்த நேரத்துல ஓர் மாஸ் announcement வந்துச்சு. அது தான் “இரத்தம் ரணம் ரௌத்திரம்” (RRR). 

ஜூனியர் என் டி ஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி போன்ற பன்மொழி நட்சத்திர நடிகர்கள் இந்த படத்துல நடிச்சு ஒரு பான் இந்தியா படமா வெளியாகி சுமார் ₹1200 கோடிகளை இந்த படம் வாரிக் குவித்தது. ராஜமௌலி கேரியர் ல இன்னொரு மணி மகுடமாக இந்த படம் அமைந்தது. 

அண்ட் இந்த படத்த ஜப்பான் மொழில டப் செஞ்சு கடந்த அக்டோபர் 21 அன்னைக்கு ஜப்பான் ல வெளியாகி அங்கையும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளா ஒடிச்சு. 

இதுவரை எந்த ஒரு இந்திய படமும் திரையிட படாத அளவுக்கு, கிட்டதட்ட 44 நகரங்களில் 209 வழக்கமான தியேட்டர்களிலும், 31 ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் ரீலீஸ் ஆச்சு. ஜப்பான் ரசிகர்கள் மத்தியில வேற லெவல் response வந்து இருக்கு. அது எந்த விதத்துல நா ஜப்பான் திரை அரங்கங்கள்ல 200 நாட்கள் வெற்றிகரமா ஓடி இதுவரை ₹119 கோடிகளை கலெக்ட் பண்ணி இருக்காம். 

ஏற்கனவே, இரத்தம் ரணம் ரௌத்திரம் படம் ஆஸ்கர் விழாவில் இரண்டு விருதுகளை வாங்கி இருக்குற நிலையில இந்த moment உம் படக்குழு ஓட உழைப்புக்கு கிடச்ச இன்னொரு மகுடம் அப்படினு தான் சொல்லணும். 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *