
சென்னை மாநகராட்சி சார்பில் பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் 35.79 கோடி ரூபாய் செலவில் பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து 19 புதிய பூங்காக்கள், 5 புதிய விளையாட்டு திடல்கள் அமைக்கும் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 14 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.