” ரஜினிகாந்த் விவரம் தெரியாத மனிதர். “நடிகை ரோஜா பாய்ச்சல்

Advertisements

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் பிரபல தெலுங்கு நடிகரும் மறைந்த
முதல்வருமான என்டி ராமராவின் 100வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ராமராவ் மகன்
நடிகர் பாலகிருஷ்ணா உட்படபலரும் கலந்து கொண்டனர்.
இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது சந்திரபாபு நாயுடுவை
குறிப்பிட்டு பேசிய அவர், சந்திரபாபு நாயுடு ஒரு தீர்க்கதரிசி, தொலைநோக்கு பார்வை
கொண்ட அரசியல் தலைவர். அவருடைய தொலைநோக்கு பார்வையின் காரணமாகவே
ஹைதராபாத் இப்போது ஹைடெக் சிட்டியாக உருவெடுத்து நியூயார்க் நகரம் போல்
அபிவிருத்தி அடைந்துள்ளது என்று கூறினார்.
இந்த நிலையில் பாபட்டலா என்ற இடத்தில் செய்தியாளர்களுடன் பேசிய ஆந்திர
சுற்றுலாத்துறை அமைச்சர்  மற்றும் பிரபல நடிகையான ரோஜா, ரஜினிகாந்த்தின்  பேச்சு
சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது. 2003 வது ஆண்டுடன் தெலுங்கானாவில்

Advertisements

சந்திரபாபு நாயுடு ஆட்சி  முடிந்து விட்டது. அதன்பின் இப்போது இருபது ஆண்டுகள்
கழித்து பார்க்கும் போது ஹைதராபாத் நகரம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
சுமார் 20 ஆண்டுகாலம் ஐதராபாத் பகுதியை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடு அந்த
நகரின் வளர்ச்சிக்கு எப்படி காரணமாக இருக்க முடியும் என்பதை ரஜினிகாந்த் நினைத்துப்
பார்க்க வேண்டும். தன்னுடைய உரையில் விண்ணுலகில் இருந்து சந்திரபாபு நாயுடு மீது
என் டி ராமராவ் ஆசிகளை பொழிகிறார் என்று குறிப்பிட்டார் ரஜினிகாந்த்.
என்டி ராமராவின் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான் என்பது
அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அவருடைய ஆசி இவருக்கு எப்படி
கிடைக்கும். தன்னுடைய இறுதி காலத்தில் சந்திரபாபு நாயுடு பற்றி பேசிய என்டி ராமராவ்,
என்னுடைய மருமகன் ஒரு திருடன். அவனை யாரும் நம்பாதீர்கள் என்று கூறினார்.
ரஜினிகாந்த்திற்கு இது தெரியவில்லை என்றால், என்.டி.ராமராவ் பேச்சு அடங்கிய
சிடியை அவருக்கு அனுப்பி வைக்கிறேன். அதை போட்டு என்டி ராமராவ் சந்திரபாபு
நாயுடு பற்றி கூறியதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *