திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாலை, காலை என இரண்டு சுற்றாக 8000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் செய்யாறு நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை ரேக்கிங் செய்து போர்வையை சாட்டை கயிறு போல திரித்து அடிப்பது போன்ற கொடுமையும் நடந்துள்ளது. அரசு மாணவர் விடுதியில் ரேக்கிங் சண்டை குறித்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த தகவல் அறிந்த அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி கல்லூரி முதல்வர் கலைவாணி கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து மாணவர்களின் செயலை பெற்றோர்களுக்கு தெரிவித்தும், பெற்றோர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர் மூலம் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜூனியர் மாணவர்களுக்கு ரேக்கிங்.. வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.!
Advertisements