குத்தாட்டம் போடும் ‘பாபா பாஸ்கர்’…கொண்டாடும் டிவி சேனல்

Advertisements

தமிழ் தொலைக்காட்சிகளில் ஜனரஞ்கமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் நம்பர் ஒன்
இடத்தில் இருக்கிறது விஜய் தொலைக்காட்சி.”விஜய் டிவியை அடிச்சிக்க ஆளே
இல்லை” என்று தாராளமாகச் சொல்லலாம்..பிரமாண்டமான செட்டுகள்
முதல்..விருந்தினர்களாக பங்கேற்கும் வி.ஐ.பிக்கள் வரை விஜய் தொலைக்காட்சியின்
எல்லா நிகழ்ச்சிகளும் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுபவை..
ஆணானப்பட்ட விஜய் தொலைக் காட்சிக்கு எதிராக கிளம்பி இருக்கிறது ஒரு
தொலைக்காட்சி… விஜய் தொலைக்காட்சியில் நடனக் காட்சிகள் எப்படி பட்டையைக்
கிளப்புமோ அதை விடவும் ஒரு படி மேலே போய் அந்த தொலைக்காட்சியில் வரும்
நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கின்றன…பல சமயங்களில்
மெய்சிலிர்க்கவும் வைக்கின்றன..
ஜீ தமிழ் தொலைக் காட்சிதான் அது ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்
கிழமைகளில் இரவு 8. மணிக்கு ஒளி பரப்பாகும் “டான்ஸ் ஜோடி டான்ஸ்”
நிகழ்ச்சிதான் அது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த
நிகழ்ச்சியில் தற்போது நடிகைகள் சினேகா, சங்கீதா டான்ஸ் மாஸ்டர் பாபாபாஸ்கர்
ஆகியோர் நடுவர்களாக இருக்க, பிரபல “வீ.ஜே”அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார்…
இந்த நிக்ழச்சிக்கு மிகப் பெரிய மைல் கல்லாக கலக்குபவர் நடன இயக்குனர் பாப
பாஸ்கர்தான்..சும்மா நடுவராக மட்டும் இல்லாமல் இவர் அவ்வப்போது போடும்
அலப்பறை சத்தம், மேடையில் போட்டியாளர்களுடன் போடும் கும்மாங்குத்து
ஆட்டம்… இது மட்டுமல்ல… போட்டியை விறு விறுப்பாக கொண்டு செல்வதிலும்
இவரது பங்கு மிக முக்கியமானது.இவரைப் பார்த்தாலே பார்வையாளர்களிடம்
ஒருவித உற்சாகம் தொற்றிக் கொள்ளும் அப்படியொரு ‘ஆக்டிவ்’வான மனிதர் பாபா
பாஸ்கர்…
விஜய் நடித்த “கில்லி’ படத்தில் வரும் “செல்லம்” என்கிற ‘டயலாக்’ நடிகர் பிரகாஷ்
ராஜுக்கு மிகவும் பெயர் வாங்கித் தந்த வசனம்.. அது போலவே பாபா பாஸ்கரும்

Advertisements

நிகழ்ச்சியில் பங்கேற்கும் யாராக இருந்தாலும் அவர்களை “செல்லம்’ என்றுதான்
அழைப்பார்.
கடந்த 2011-ல் சிவ கார்த்திகேயனின் “அது இது எது” நிகழ்ச்சி மூலமாக தொலைக்
காட்சிப் பெட்டிக்குள் நுழைந்த இவர் விஜய் டிவியில் வந்த குக் வித் கோமாளி –
சீசன் 2 நிகழ்ச்சி மூலம்தான் மக்களுக்கு முழுவதுமாக அறிமுகமானார்.அதில் இவர்
செய்த சேஷ்டைகளும், உற்சாகமான நடிப்பும் அனைவரையும் கவர்ந்தன.
நெற்றி நிறைய பட்டை…கழுத்தில் ருத்ராட்சக் கொட்டை அணிந்திருக்கும் இவரது
மீசை, தாடியைப் பார்த்தால் ஒரு சாயலில் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால்
போலவே இருப்பார். ஆன்மீக வாதியான இவர் தனது மேல்சட்டையின் முதல்
பட்டனை மட்டும் மாட்ட மாட்டார் கிட்டத்தட்ட ஒரு ரவுடி ஸ்டைலில் இருப்பார்.
இவருக்கு வயது 49 ஆகிறது…ஆனாலும் 20 வயது சின்னப் பையன் மாதிரி உடலை
வளைத்து, நிமிர்த்திக் குத்தாட்டம் போடுவதில் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல…யார்
இந்த பாபா பாஸ்கர்…?
பாபா பாஸ்கரின் பூர்வீகம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்.. ஆனால் இவர் பிறந்தது,
வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.இவரது சொந்தப் பெயர் பாஸ்கர்
மட்டும்தான்… இவர் சாய் பாபாவின் தீவிர பக்தர் என்பதால் தனது பெயரோடு பாபா
என்பதையும் சேர்த்துக் கொண்டார்.
மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். படிப்பு எட்டாம் வகுப்பு வரைதான்
தனது 9-வது வயதில் இருந்தே சினிமாவில் ஆட வந்து விட்டார்.கூட்டத்தோடு
கூட்டமாகச் சேர்ந்து ஆடுவதில் தொடங்கி பின்னர் இளம் வயதில் பால்ராஜ்
மாஸ்டரிடம் உதவியாளராகச் சேர்ந்தார்.
“படிப்பு வராவிட்டால் என்ன? உனக்கு தெரிஞ்ச சினிமா நடனத்தையே ஆடு” என
என்கரேஜ்மென்ட் செய்து வளர்த்தவர் பாபா பாஸ்கரின் தந்தை..
பால்ராஜ் மாஸ்டரிடம் நடனக் கலையை கற்றுக் கொண்ட பாபா பாஸ்கர் சிவ சங்கர்
மாஸ்டரிடம் உதவியாளராக இருந்தவர். பரத நாட்டியத்திற்கு பெயர் போனவர்
சிவசங்கர் பாபா. தனுஷின் “திருடா திருடி” படத்தில் வரும் மன்மதராசா…மன்மதராசா
பாடலுக்கு நடனம் அமைத்தவர் இவர்தான்.
இவரையடுத்து பிரபல நடன இயக்குனர் ராஜு சுந்தரத்திரடம் 5 ஆண்டுகள் பணி
புரிந்தவர் பாபா பாஸ்கர். இந்தக் கால கட்டத்தில் எல்லாம் மிகப் பல போராங்களைக்

கடந்துதான் தெலுங்கில் “கோத்த பங்காரு” படம் மூலம் நடன இயக்குனராக
வெளிப்பட்டார்.
பாபா பாஸ்கர் தமிழில் முதன் முதலாக நடன இயக்குனராக பணியாற்றியது தனுஷ்
நடித்த “திருவிளையாடல் ஆரம்பம்” படம். இந்தப் படத்தில் தனுஷ்,தமன்னா
ஆடிப்பாடும் “மதுரை ஜில்லா மச்சான்தாண்டி” பாடல்தான் இவருக்கு கை கொடுத்த
முதப் பாடல்..
இளம் சூப்பர் ஸ்டார் தனுஷ் இவரோடு பள்ளியில் ஒன்றாகப்
படித்தவர்.”அப்பவெல்லாம் தனுஷ் படிப்பில் கவனம் செலுத்துவார்..ரொம்ப அப்பாவி.
நான் ஆடப் போயிருவேன்” எனக் கூறியுள்ளார் பாபா பாஸ்கர்.
தமிழ் சினிமாவில் தனது தனிப்பட்ட திறமையால் கலக்கிக் கொண்டிருப்பவர் பாபா
பாஸ்கர். ஆடல் கலையில் இவர் ஆடுபவர் மட்டுமல்ல…ஆட்டுவிப்பவரும் கூட
இவரது நடன அமைப்புகள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்ல…இனம்
புரியாத துள்ளலும் இருக்கும்…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விஷால்,தனுஷ், கார்த்தி, சிவ
கார்த்திகேயன் தெலுங்கில் நாகார்ஜுனா, மகேஷ்பாபு, ராம்சரண், வருண் சந்தோஷ்
என அனைத்து முன்னணி நட்சத்திரங்களையும் திரையில் ஆட வைத்த பெருமை
பாபா பாஸ்கருக்கும் உண்டு.
தமிழ் தெலுங்கு கன்னடம், மலையாளம் எனப் பல மொழிப் படங்களுக்கும் நடனக்
காட்சிகள் அமைத்தவர்.
அனிருத் இசையில் வெளி வந்த “பேட்ட” படத்தில் “பார்க்கத்தானே போரே.. இந்தக்
காளியோட ஆட்டத்த” என்று சொல்லியபடி சூப்பர் ரஜினிகாந்த் ஒரு பாடலுக்கு
ஆடுவார் “மரணம்…மாசு மரணம் டப்புத் தரணும், அதுக்கு அவன்தான் பொறந்து
வரணும்….”கிட்டத்தட்ட 300 பேருக்கும் மேலான துணை நடிகர்கள் பங்கேற்ற
நடனக்கட்சி இது இதை வடிவமைத்தவர் வேறு யாருமல்ல…பாப பாஸ்கர்தான்..
சூர்யா நடித்த மூன்று சிங்கம் படத்திற்கும் பாபா பாஸ்கர்தான் நடன மாஸ்டர். முதல்
சிங்கம் படத்தில் வரும் “காதல் வந்தாலே கண்ணு ரெண்டும் தன்னாலே காத்தா
சுத்துதே உந்தன் பின்னாலே” பாடலுக்கு சூர்யாவும். அனுஷ்காவும் ‘செமத்’தனமான
ஒரு ஆட்டம் போட்டிருப்பார்கள்.அதே போல் அனுஷ்கா ஆடிப்பாடும் “என் இதயம்
இதுவரை துடித்ததில்லை.. இப்போ துடிக்கிறதே..” பாடலுக்கும் ஆட்டக் களம் கற்றுக்

கொடுத்தவர் இந்த பாபா பாஸ்கர்தான்.இந்தப் பாடல்களுக்காக “பிலிம் பேர்” விருது
வாங்கியவர் பாபா பாஸ்கர்.
ஆதவன் படத்தில் வரும் “ஏ டமக்கு டமக்கு டம்டம்மா நான் தில்லாலங்கடி ஆமா”
பாடலுக்கும் பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக அமைந்த “வாராயோ
வாராயோ காதல் நிஷா”..பாடலுக்கு நடனம் அமைத்தவர் பாபா பாஸ்கர்தான்.
இதையெல்லாம் தாண்டி பாபா பாஸ்கர் தமிழகத்து இளைஞர்களை தனது
வசப்படுத்திய நடனக் காட்சி எது தெரியுமா? ‘தேவராட்டம்’ படத்தில் இரண்டு
கரகாட்ட கலைஞர்களுடன் கவுதம் கார்த்திக் ஆட்டம் போட்டிருப்பாரே..“மதுரை
பலபளக்குது மச்சான் மல்லிகைப்பூ மண மணக்குது” என்ற பாடல்தான்.
இன்னும் பாபா பாஸ்கர் ‘ஹிட்’ அடித்த நடனக் காட்சிகள் எக்கச்சக்கம். நடன
மாஸ்டர் பிரபு தேவா தயாரித்து விஜய் நடித்த படம் வில்லு இந்த படத்திற்கு நடன
இயக்குனராக பணியாற்றியவர் பாபா பாஸ்கர்தான். இந்த படத்தில் வரும் ஜல்ஷா”
பாடலிலும் “வாடா மாப்பிள்ளை” பாடலிலும் நடனத்தில் புதுமைகள் இருக்கும். இதே
போல் விஜய் நடித்த “வேட்டைக்காரன்” படத்திற்கும் பாபா பாஸ்கர்தான் நடன
மாஸ்டர்.
காப்பான் படத்தில் வரும் “சிறுக்கி, சீனிக்கட்டி சினுக்கி சிங்காரி..” சிவகார்த்திகேயன்
படத்தில் வரும் “டார்லிங்கு டம்பக்கு” சமீபத்தில் வெளி வந்த விருமன் படத்தில்
“கஞ்சா பூ கண்னால”… “வானம் கிடுகிடுங்குது வைகை நதி நடி நடுங்குது” என தமிழ்
சினிமவை கலக்கிக் கொண்டிருப்பவர் பாபா பாஸ்கர்
பொல்லாதவன், மாப்பிள்ளை ஷங்கரின் 2.0, என ரஜினி நடித்த பல படங்களுக்கு
நடனம் அமைத்த பாபா பாஸ்கர்“கிளிமாஞ்சாரோ” பாடலுக்கும் விருது
வாங்கியிருக்கிறார்.
பாபா பாஸ்கர் நடன இயக்குனர் மட்டுமல்ல. பல படங்களில் நடித்திருக்கும் இவர்
ஜி.வி. பிரகாஷ், பார்த்திபனை வைத்து குப்பத்து ராஜா படத்தை திரைக்கதை எழுதி
இயக்கியவர். தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிச் சுற்று
வரை வந்து மூன்றாம் இடம் பிடித்தவர்.
விஜய் அவார்ட்ஸ், சைமா விருது, ஆனந்தவிகடன் விருது, பிகைன்ட் வுட்ஸ் விருது
எனப் பல விருதுகளை வாங்கிய இவருக்கு ரேவதி என்ற மனைவியும் பாபா அர்ஜுன்
என்ற மகனும், பாபா லக்‌ஷயா என்ற மகளுமிருக்கிறார்கள்.

எனது இத்தனை வெற்றிக்கும் காரணம் எனது மனைவிதான் எனச் சொல்லும் பாபா
பாஸ்கர் அது மட்டுமல்ல விஷயம் எதுவாக இருந்தாலும் மோதிப்பார்க்கணும்ணு
நினைப்பேன்.. சவாலாக எடுத்துச் செய்வதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம் என்கிறார்.
அதே போல் வாழ்க்கையில ஜெயிக்கணும்ணா பெரியவங்க ஆசிர்வாதம் வேண்டும்
என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *