அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின்மனைவிக்கும் ராணுவ வீரருக்கும் புதுசா ஒரு ‘லவ்”

Advertisements

கடந்த 2021 ஜனவரி 20-ம் தேதியன்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றார்
ஜோ பைடன். இவரிடம் தோல்வியுற்ற அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட்
டிரம்புக்கு இந்த தேர்தல் தோல்வி மட்டுமல்ல. அவரது மனைவி மெலனியா
விவாகரத்து செய்யப் போவதாக வெளி வரும் தகவல்களும் சேர்ந்து மிகவும் மன
வேதனையில் இருக்கிறார் அவர்.. அந்த வகையில் டிரம்பின் மனைவியான
மெலனியாவின் புதிய காதலர் பற்றி அங்கு காட்டுத் தீ போல் செய்திகள் பரவி
வருகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 3 மனைவிகளை திருமணம்
செய்தவர். அவரது முதல் மனைவி ‘இவானா டிரம்ப்’. இவருடன் 1977ல் திருமணம்
நடந்தது. 14 ஆண்டு கால வாழ்க்கைக்குப் பின்னர் 1991-ல் இந்தத் தம்பதியர்
பிரிந்தனர். இரண்டாவது மனைவி ‘மார்லா மேப்பில்சு’. இவருடன் 1993-ல் திருமணம்
நடந்தது. 6 ஆண்டு கால தாம்பத்ய வாழக்கைக்குப் பின்னர் 1999-ல் இவர்கள்
பிரிந்தனர்.தற்போது 3-வது மனைவியான மெலேனியாவும், பாரன் டிரம்பு என்ற 14
வயது மகனுடனும் வசித்து வருகிறார். டிரம்புக்கும் – மெலனியாவுக்கும் திருமணம்
நடைபெற்று 15 ஆண்டுகள் ஆகின்றன. இருவருக்கும் இடையே 25 வயது
வித்தியாசம் உள்ளது.
சமீபத்தில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட போது கூடவே டிரம்ப்- மெலனியா
விவாகரத்து விவகாரமும் பூதாரகரமாக கிளம்பி வெளியே வந்தது. இதற்கிடையே
டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்பை விவாகரத்து செய்த போது அவருக்கு 14
மில்லியன் அமெரிக்க டாலர், மற்றும் இரண்டு மாளிகை வீடுகள் வழங்கப்பட்டன.
இரண்டாவது மனைவி, மார்லா மேப்பில்சுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்
கொடுக்கப்பட்டது. இதனைடிப்படையில் தற்போது டிரம்பை விவாகரத்து செய்ய
மெலனியா முடிவு செய்தால் விவாகரத்து தீர்வுக்கு இந்திய மதிப்பு ரூ. 372.16 கோடி
பெறக்கூடும் என்று சட்ட நிபுணர் பெர்க்மேன் பாட்ஜர் நியூமன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ராணுவ வீரர் ஒருவரை மெலனியா காதலித்து
வருவதாகவும்,டிரம்ப்பை கழற்றி விட்ட பின் அவரைத்தான் திருமணம் செய்து

Advertisements

கொள்ளப்போவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் பரபரப்பு செய்திகள், படங்களை
வெளியிட்டு வருகின்றன அமெரிக்காவில் போர் வீரர்கள் நினைவு தினக் கூட்டம்
நடந்த போது இளம் வயது ராணுவ வீரர் ஒருவரது, கைகளை கோர்த்து பிடித்தபடி
இருந்தார் மெலனியா… நிகழ்ச்சி தொடங்கியது முதல் முடியும் வரை அவரது
கைகளை விடாமல் பிடித்தபடி மிக நெருக்கமாகவே இருந்தார்.
கணவர் டிரம்ப்புடன் கூட அவர் இவ்வளவு நெருக்கமாக நின்றது கிடையாது.
முன்னதாக ஒரு முறை இதே போல் ஒரு நிகழ்ச்சியின் போது மெலனியாவின்
கைகளை தொடச் சென்ற டிரம்ப்பின் கைகளை மெலனியா தட்டி விட்ட, வீடியோ
வைரலாக பரவியது. அந்த வகையில் டிரம்ப்போடு மெலனியா சரியான உறவில்
இல்லை என்பது பல முறை அறியப்பட்டிருக்கிறது.
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது “இந்த தேர்தலில் , நான் ஊரை விட்டே
ஓடி விடுவேன்” என டிரம்ப் பேசினார். இப்போது அவர் உண்மையிலேயே ஊரை
விட்டு ஓடும் நிலை வந்து விட்டதாக அங்குள்ள பத்திரிகைகள் எழுதித்
தள்ளுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *