முதலாம் ஆண்டு மாணவரை மொட்டை அடித்து ராகிங் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் உள்ள தனியார் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவர் ஒருவரை அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் மொட்டையடித்து ராகிங் செய்துள்ளனர். ராகிங்கால் பாதிக்கப்பட்ட மாணவர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.PSG college Ragging
புகாரின் அடிப்படையில் ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் போலீசார் கைது செய்தனர். மது குடிப்பதற்காக பணம் கேட்டு ஜூனியர் மாணவரை தாக்கி மொட்டையடித்து ராகிங் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதலாம் ஆண்டு மாணவரை தாக்கி, மொட்டை அடித்து ராகிங் செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.