தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதிக்கு ஒத்திவைப்பு..!

Advertisements

தமிழகம் முழுவதும் தற்போது புதிய கல்வி ஆண்டில் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந்தேதியும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிந்தது. ஆனால் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில் ஜூன் 7-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார்.

Advertisements

1-ந்தேதிக்கு பதில் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் வெயில் குறைந்து விடும் என கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 6 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் இருந்தது.

எனவே பள்ளிகள் திறப்பதை மீண்டும் தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து அரசு ஆலோசித்து வந்தது. இதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கோட்டைக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். கல்வித்துறை செயலாளர் காகர்லாஉஷா மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கூடங்களை திறப்பதை மீண்டும் தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- வெயில் தாக்கம் இன்னும் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை மேலும் தள்ளி வைப்பது என்று முதலமைச்சருடன் நடந்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளை ஜூன் 14-ந்தேதி திறப்பது என்றும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ந்தேதி பள்ளிகளை திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *