பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் கோவிலில், சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கரி கிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 10 நாட்கள் நடைபெறும், சித்திரை பிரம்மோற்சவ திருவிழா, கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7 ஆம் நாளான நேற்று, சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கரி கிருஷ்ண பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேக, அலங்கார, தீப ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், அலங்கரிக்கப்பட்ட விஷ்ணு பாவனா ரதம் என்ற திருத்தேரில், கரிகிருஷ்ண பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்