பெருங்களத்தூர் ஸ்ரீ லட்சுமி விநாயகர் திருக்கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தாம்பரம், புது பெருங்களத்தூர் புத்தர் நகரில், ஸ்ரீ லட்சுமி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலையில், நான்காம் யாகசாலை பூஜைகளுடன் லட்சுமி விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. யாகசாலை வேள்வி நடத்தப்பட்டு, கலசம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஸ்ரீ லட்சுமி விநாயகருக்கு கோபுர விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், லட்சுமி விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மஹா கும்பாபிஷேக விழாவில், சிறப்பு விருந்தினராக தாம்பரம் மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர் சேகர், கவுன்சிலர் கமலா சேகர், பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை குடியிருப்போர் நல சங்க தலைவர் மகேந்திர பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.