
டெல்லி மாநிலத்தில் தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. முதல்-மந்திரியாக அதிஷி உள்ளார்.
சட்டசபையில் பதவிக்காலம் பிப்ரவரி 23-ந்தேதி நிறைவடைகிறது.
எனவே 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க., டெல்லியில் தற்போது ஆட்சிக்கட்டிலில் இருக்கும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
டெல்லி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் தொடங்கிவிட்டது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுகையில்,
டெல்லியில் பா.ஜ.க. ஒவ்வொரு தீய செயல்களை முயற்சித்தாலும், தேர்தல் ஆணையம் தூங்கிக் கொண்டு இருந்தாலும், நேர்மறையான பார்வை கொண்ட டெல்லி மக்கள் நேர்மையான கட்சிக்கு வாக்களிக்கப் போகிறார்கள்.
படித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். தேர்தலுக்கு முந்தைய இரவு ஃபார்ம் 17 சி-ஐ பொருத்துவதற்கான இணையதளத்தை உருவாக்கியுள்ளோம்.
வாக்குச்சாவடியில் ஸ்பை கேமராக்கள் உள்ளன. பா.ஜ.க. சந்தேகப்படும்படியாக எதையும் செய்வதை நீங்கள் கண்டால், அதைப் பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடுங்கள்.
அரசின் கஜானாவை மக்கள் பக்கம் திருப்பிய ஒரே அரசியல்வாதி அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே… குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.
அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நேர்மையான அரசியல்வாதி என்பதால் பா.ஜ.க. குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்க முடியாது என்று அவர் கூறினார்.
