மோட்டார் சைக்கிளில் இருவர்தான் பயணிக்க வேண்டும். மூன்று பேர் பயணித்தால் அது
சட்டப்படி குற்றமாகும். இந்த நடைமுறை அமலில் இருக்கிறது.
இந்த நிலையில் கேரளாவை பொறுத்த வரையில் மோட்டார் சைக்கிளில் மூன்று பேர்
சென்றால் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கேரளாவில்காமிரா மூலம் தானியங்கி போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படுவதால்
யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது
அவர்களை படம் பிடித்து உடனடியாக அபராத தொகையை அனுப்பி விடுவார்கள்.
இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் குழந்தைகளை தங்களுடன் அழைத்துச்
செல்லும் பெற்றோர்களுக்கு இது மிகவும் கஷ்டமானதாக இருக்கிறது என்று
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனால் மக்களுக்கு ஏற்படும் சங்கடத்தை உணர்வதாக தெரிவித்துள்ள கேரளா அரசு
போக்குவரத்து துறை இது குறித்து மத்திய அரசாங்கத்திற்கு புதிய கோரிக்கை மனு
ஒன்றை அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி மோட்டார் சைக்கிளில் மூன்று பேர்
செல்ல அனுமதி கேட்க இருக்கிறார்கள் .இந்த அனுமதியை பெற வேண்டுமானால்
சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் .மத்திய அரசு இது தொடர்பாக சட்ட திருத்தம்
செய்யுமா? என்பது தெரியவில்லை
டூ வீலரில் 3 பேர் செல்ல அனுமதி – கேரளா அரசு கோரிக்கை
Advertisements