இம்ரான் கானின் கட்சியை  தடை செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலனை..

Advertisements

இம்ரான் கானின் கட்சியை  தடை செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலனை செய்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி  தெரிவித்துள்ளார். 

Advertisements

 பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தபோது, அவரை துணை ராணுவ படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில்,  போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ. கட்டிடம் உட்பட பல ராணுவ தளங்களை இம்ரான் கானின் கட்சியினர் சேதப்படுத்தினர்.  இந்த வன்முறை மோதலில் 10 பேர் பலியானதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப், இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது,    ராணுவ நிலைகளை தாக்கியதால் இம்ரான் கானின்  பி.டி.ஐ. கட்சியை தடை செய்வது குறித்து பாகிஸ்தான் அரசு பரிசீலனை செய்து வருவதாக  தெரிவித்தார்.  மேலும் இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், இம்ரான் கானின் கட்சியை தடை செய்ய அரசு தீர்மானித்தால் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிப் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *