இந்தியாவைப் பொருத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே மொபைல் போன் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 20 சதவீதம் அளவிற்கு மொபைல் போன் உற்பத்தி குறைந்து வருகிறது.
பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த செல்போன்களை விற்க முடியாத நிலையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக செல்போன் உற்பத்தி மேலும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் செல்போன் விற்பனை 30 சதவீதம் அளவிற்கு குறைந்து உள்ளது .
2023 நடைபாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மட்டுமே 18 சதவீதம் குறைந்து இருக்கிறது .இது போன்ற பாதிப்பு உலகம் முழுவதும் நிலவுவதாக தெரியவந்துள்ளது