.ரெயில் விபத்து எதிரொலியாக ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 18க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ராhகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில் விபத்து எதிரொலியாக ஒடிசாவில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநிலம் முழுவதும் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது என அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்