அரசியலிலோ..அரசு வேலையிலோ, தனியார் துறை நிர்வாகத்திலோ கடுமையாக
உழைத்தும் உங்களுக்குறிய அங்கீகாரம் கிடைக்க வில்லையா? தக்க பதவி உயர்வு
வரவில்லையா? நீங்கள் கும்பிட்ட வேண்டிய தெய்வம் “நரசிம்மர்”. இவருக்குறிய சில
மந்திரங்களைச் சொல்லி சிறப்பு வழிபாடு செய்தால் பதவியில் ஜொலிக்கலாம்
என்கிறது சாஸ்திரத் தகவல்கள்.
நரசிம்மர் என்பவர் துடி கொண்ட தெய்வமாகும் இவர் விஷ்ணுவின் நான்காவது
அவதாரமாகக் கருதப்படுபவர். நரசிம்மரை வழிபட்டால் சிவன் – பார்வதியை
வழிபட்ட பலன் கிடைக்கும்.
நரசிம்மரை வழிபடுவதற்கு ”நிராஞ்சன வழிபாடு” என்றொரு முறை இருக்கிறது. இது
வேறு ஒன்றுமல்ல..நரசிம்மர் முன்பாக பச்சரிசியை பரப்பி, தேங்காயில் நெய்
ஊற்றி,தீபமேற்றி வணங்குவதுதான். இந்த சமயத்தில் ‘‘ஸ்ரீநரசிம்ஹாய நம’’ என்று
சொல்லி ஒரு பூவைப் போட்டு வழிபட வேண்டும்.
பதவிகள் தேடித் தரும் “நரசிம்மர்”
Advertisements