ஒடிசா ரெயில் விபத்து காரணமாக தமிழ்நாடு முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ரத்து..!

Advertisements

ஒடிசா ரெயில் விபத்து காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 233 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒடிசா ரெயில் விபத்து காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மலர்க் கண்காட்சிக்கு முதலமைச்சர் செல்லும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று மரியாதை மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டும் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *