
சமீபத்தில் வெளியாகி வெற்றிகராமாக ஓடிக்கொண்டிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த வீரன் திரைப்படத்திற்கும் கேரளாவுல பெரிதும் கொண்டாடப்பட்ட, மலையாளத்தின் முதல் சூப் ஹீரோ படமான டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான மின்னல் முரளி திரைப்படத்திற்கும் உள்ள வித்தியாசம் பற்றி தான் இந்த வீடியோவில் பார்க்க போகிறோம்.
மின்னல் முரளி கேரளாவுல மட்டும் அல்ல உலகளவில் வரவேற்ப்பு பெற்ற படம்.ஆனால் இது தான் மலையாள சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படம்.தமிழுக்கு வீரன் ஒன்றும் புதிதல்ல தமிழில் வந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் பெரிய அடி வாங்கி தான் போகியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.காரணம் வந்த எல்லா படங்களும் தோல்வியுற்றே போனது.பொதுவாகவே தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களில் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு சண்டை காட்சிகள் இருக்கும்.இரயிலை தூக்கி வாரி போடுவது.மண்ணுக்குள் இருந்து எழுந்திருப்பது,துப்பாக்கி குண்டை கடித்து மெல்லுவது போன்ற காட்சிகள் உதாரணம்.அவ்வபோது தமிழ் ஹீரோக்களிடமும் இந்த குணங்கள் எட்டி பார்ப்பதுண்டு.சூப்பர் ஹீரோ வென்றால் இப்படியெல்லாம் இருக்க வேண்டும், அவனுக்கேனே ஒரு பிரத்யேக வாகனம்,சராசரி மனிதர்களிடம் இல்லாத சூப்பர் பவர்,பிரத்யேக ஆடை போன்றவையெல்லாம் இருந்தால் தான் சூப்பர் ஹீரோ வாக ஏற்றுக்கொள்வோம்,இந்த சூப்பர் ஹீரோ பார்முலாக்களை உடைத்தெறிந்து வெளிவந்த படம் தான் மின்னல் முரளி.

பொதுவாகவே இயல்பான எதார்த்தங்களையும் மக்களின் வாழ்வியலை காட்சியமைப்பதில் கேரள சினிமாக்காரர்கள் கெட்டிக்காரர்கள்.மின்னல் முரளியில் வரும் சூப்பர் ஹீரோ படத்தின் கடைசி பாகம் வரை கேரளா பாரம்பரிய உடையான முண்டு,ஷர்டில் தான் வருவார்.அவருக்கு கிடைக்கும் சூப்பர் பவரை வைத்து அவருடைய இன்னசன்ட் குணத்தால் செய்யும் லூட்டிகள் தேவையில்லாத அறுக்கும் காட்சிகள் எதுவும் இல்லை.முக்கியமாக வியக்க வைத்தது படத்தின் vfx தான்.குறைந்த பட்ஜெட்டை வைத்திக்கொண்டு இந்த அளவிற்கு செய்ய முடியுமா என்று பெரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது மின்னல் முரளி.ஹீரோ தகுந்த வில்லன்.எப்போதும் ஹீரோ பலமானவன் வில்லன் பலவீனமானவன் என்ற பார்முலா உலகத்தில் முதல் சினிமா தோன்றிய காலம் முதல் உலகத்தின் கடைசி படம் வரை இருக்க போகிறது.அதில் எந்த மாற்றமும் இல்லை,மின்னல் முரளியின் அதை உடைத்தெறிந்திருப்பார்கள்,ஹீரோவிற்கு என்ன பவர் இருக்கிறதோ அதே பவரை கொண்டுள்ள வில்லன் என பல விஷயங்களில் ஆசிரியப்படுத்தியிருப்பார்கள்.
cut பண்ணி நம்ம ஹீரோ வீரனுக்கு வந்தால் மேற்குறிப்பிட்டதில் ஒரு துளி அளவிற்கும் சம்மந்தம் இருக்காது,
அதே வழக்கமான பார்முலா படம்தான்.அடுத்த காட்சி என்ன வரும் என்று தியேட்டரில் பின்னாடி உட்கார்ந்து இருப்பவர் talk backகாக சொல்லிக்கொண்டே வருவார்.அடுத்த காட்சியென்ன என்பதை முன்பே கணிக்கலாம்,ஆனால் மின்னல் முரளி போன்றே கிராமத்தில் ஒரு சூப்பர் ஹீரோ என்ற பாதையை தேர்ந்தெடுத்தாலும் அவைகள் ஏற்கப்படவில்லை என்பதே நிதர்சனம்.

படத்தை முழுமையாக குறை சொல்ல முடியாது சில கடுப்பேத்தும் நகைச்சுவைகள் வந்தாலும் ரசிக்கும் படியாக நக்கலைட்ஸ் சசி ,முனீஷ்காந்த் காளிவெங்கட் கூட்டணியெல்லாம் திரையரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தினார்கள்.வில்லனை பார்த்தல் தான் கொஞ்சம் பரிதாபமாக இருக்கிறது.மற்றபடி வழக்கமான பார்முலா படம் தான் வீரன்
