தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆசனூர் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அரசு முன்வருமா என்று, சட்டமன்ற உறுப்பினர் பன்னாரி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆசனூர் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அடுத்த ஆண்டில் துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்று கூறினார்.
மேலும், மலைப் பகுதிகளில் மேலே செல்லக் கூடிய மின்கம்பிகளை புதை வட கம்பிகளாக மாற்றும் பணி வரும் ஆண்டில், தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
மலைப் பகுதிகளில் மேலே செல்லக் கூடிய மின்கம்பிகளை, புதை வட கம்பிகளாக மாற்றும் பணி வரும் ஆண்டில் நடைபெறும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
Advertisements