பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் என்றாலே எதிர் துருவங்களாக,பல துருவங்களாக வெவ்வேறு கொள்கைகள்,மாற்று கருத்துக்கள் என பல்வேறு முரண்பாடுகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.சில நேரங்களில் கலவரமாக கூட வெடித்துக்கொள்வார்கள்.ஆனால் எம்.ஜி .ஆர் கலைஞரின் உறவு சற்று விலகியே இருந்தது.அரசியல் கட்சிகளாக இருவரும் வேறுபட்டிருந்தாலும் கலை ரீதியாகவும்,நட்பு ரீதியிலும் இருவரும் ஒற்றுமையாக இருந்தனர்.
அப்படி..தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களை தனியாக தன் அறைக்கு அழைத்து,சட்டமன்றத்தில் காமராஜரின் புகைப்படம் நிறுவ வைக்கிறோம்,அதற்கு கீழே வாசகம் எழுத வேண்டும்.நீங்கள் நல்ல வாசகம் ஒன்று எழுதிக்கொடுங்கள் என்று கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர்.அப்போது கலைஞர் எழுதி கொடுத்த வாசகம் தான் ‘உழைப்பே உயர்வு தரும்’.