சென்னை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் பிரியா தாக்கல் செய்தார். இதில் சென்னை மாநகராட்சிக்கு 80 புதிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அதன்படி மாமன்ற உறுப்பினர்களுக்கு வார்டு மேம்பாட்டு நிதி 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை பள்ளிகளில் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளில் மாணவர்களுக்கு வழங்கபடும் ஊக்கத்தொகை 1500ல் இருந்து 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், மாதத்திற்கு ஒருமுறை “மக்களைத் தேடி மேயர் திட்டம்” செயல்படுத்தப்படும் எனவும், 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை கல்விச் சுற்றுலாவாக, தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மக்களை தேடி மேயர்” என்னும் புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
Advertisements