மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!

Advertisements

இம்பால்: மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யபட்டுள்ளார். தவுபால் மாவட்டத்தைச் சேர்ந்த ஹெராதாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கலவரம் வெடித்து வருகிறது. வன்முறையில் ஈடுபட்ட குக்கி தீவிரவாதிகள் பலரை பாதுகாப்பு படை சுட்டு கொன்றது. மணிப்பூரில் நடந்த வன்முறையில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். அமைதியை நிலைநாட்டுவதற்கு போலீசாருடன் இணைந்து ராணுவமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் மணிப்பூரில் கடந்த மே மாதம் 4ம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளை களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது. இது சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து போலீசார் கொலை கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தநாடார். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய இந்த சம்பவம் அரங்கேறி 77 நாட்கள் ஆன பிறகே வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மணிப்பூரில் குக்கி பழங்குடியின 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது செய்யபட்டுள்ளார். தவுபால் மாவட்டத்தைச் சேர்ந்த ஹெராதாஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மணிப்பூரில் நடைபெற்ற பெண்களின் மீதான வன்முறைக்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று நடைபெறஉள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வன்முறை, இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *