ஒடிசா ரயில் விபத்து – மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்..!

Advertisements

ஒடிசா மாநிலம், பாலசோர் பகுதி அருகே இரண்டு பயணிகள் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில்கள் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. ரெயில்களின் 17 பெட்டிகள் தடம் புரண்டதில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், தமிழகம், மேற்கு வங்காளம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் பயணம் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழக அரசு மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியது. தற்போது ரெயில் பாதை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானார்ஜி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *