பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உதயநிதி ஸ்டாலின்,பஹத் பாசில்,வடிவேலு,கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் ட்ரைலர் வெளியானது.உதயநிதியின் கடைசி படம் என்பதால் உருவான எதிர்பார்ப்பை விட மாரியின் படம் என்பதான எதிர்பார்ப்பே அதிகம்..கூடுதலாக வடிவேலுவின் புதுவகையான தோற்றம் .
வடிவேலுவின் அழுத்தமான குரலில் தொடங்கும் மாமன்னன் ட்ரைலெர் மிரட்டி எடுத்துருக்கிறது.மாரி செல்வாராஜ்,வடிவேலு,உதயநிதி என எல்லாருமே தங்களோட காரியர்ல வெச்சு ரொம்ப முக்கியமான படமன்னு அடிக்கடி சொன்னதுக்கான அர்த்தம் ட்ரைலர் பார்த்த பின் பார்க்க முடிகிறது.உதயநிதி ஸ்டாலின்,கீர்த்தி சுரேஷ் -ன் நடிப்பெல்லாம் புரட்சிகரமானதாக இருக்கிறது.பஹதின் வில்லனிசம் பயங்கரம் ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசை மிரட்டி வைத்திருக்கிறார்.எல்லாத்தையும் கடந்து தமிழ் சினிமாவில் பன்றியின் சத்தம் ஓங்கி ஒலிக்கிறது.
மாரி செலவராஜின் மாமன்னன் அரசியல் எதை சார்ந்து விவாதிக்க போகிறது என்று உங்களின் கணிப்பை பற்றி பதிவிடுங்கள்