பரியேறும் பெருமாள், கர்ணன்:
பா.ரஞ்சித் பட்டறையில் இருந்து வந்தவர் மாரி செல்வராஜ். தான் அறிமுகமான முதல் படத்திலேயே சாதிய பிரச்சினைகளை தான் கையாண்ட படைப்பின் மூலம் மக்களுக்கு கடத்தியவர். பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றி இவரை மேலும் இது போன்று பல சமூக அவலங்களை பேச முனைத்தது. அப்படி, தனுஷ் போன்ற நட்சத்திர பிம்பம் பொருந்திய ஒரு ஆள் கூறும் போது அது வீரியத்தோடு மக்களை சென்றடையும். அது தான் “கர்ணன்” திரைப்படம்.
மாமன்னன்:
உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து அதுவும் மாரி செல்வராஜ் என்ன மாதிரி படம் கொடுக்க போகிறார் என்பது அனைவரின் கேள்வியாக இருந்தது. அதிலும் வடிவேலுவுக்கு ஒரு முழு நீள நெகடிவ் ரோல், ஏ ஆர் ரஹ்மான் இசை போன்ற பல விஷயங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின.
முதல் பாடல் வெளியீடு :
ரஹ்மான் இசையில் , யுகபாரதி வரிகளில், வடிவேலு குரலில் “ராசா கண்ணு” பாடல் நேற்று வெளியானது. ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் வலி மிகுந்த வாழ்வை வரிகளாய் வடித்து கொடுத்துள்ளது மாமன்னன் படக்குழு. இந்த பாடல் நேற்று வெளியான நிலையில் பலரும் இதை சிலாகித்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, வடிவேலுவை வைத்து ரஹ்மான் செய்த இந்த முயற்சி தான் தற்போது ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. மாமன்னன் வரும் ஜூன் 29 அன்று திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.