
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பல முன்னனி பல மொழி நட்சத்திரங்கள் நடித்து வரும் ஒரு ஆக்சன் திரில்லர் படம் “லியோ”. முதல் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது. லியோ இசை வெளியீடு செப்டம்பர் இறுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 19 அன்று இப்படம் திரைக்கு வருகிறது.
விஜய் 68 க்கு யார் இயக்குநர் ?
தான் நடித்து வரும் படம் முடிவதற்குள் விஜய் தனது அடுத்த பட இயக்குனரை தேர்வு செய்து அவரை ஸ்கிரிப்ட் தயார் செய்ய சொல்லி விடுவார். அது தான் விஜய்யின் வழக்கமான ஃபார்முலா. அப்படி, பல பெயர்கள் லைன் அப்பில் இருக்க தற்போது வைரல் ஆகி வரும் இயக்குநர் பெயர் “வெங்கட் பிரபு”. ஆம், விஜய் அவருக்காக ஒரு மிரட்டும் ஸ்கிரீன் பிளே கொண்ட சஸ்பென்ஸ் திரில்லர் பட கதையை தயார் சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல ஷூட்டிங் ஐ 50 நாட்களில் முடித்து விட வேண்டும் எனவும் கட்டளை இட்டு உள்ளார்.
விஜய் 68 ஹீரோயின் :
விஜய்யின் படத்துக்கு பல முன்னணி ஹீரோயின்கள் பெயர்கள் டாக்ஸ் இல் உள்ளன. அதில் நயன்தாரா, திரிஷா பெயர்கள் டாப் லிஸ்டில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் நயன்தாராவை வெங்கட் பிரபு சந்தித்து பேசி உள்ளதாகவும், பல கோடிகளை அள்ளி கொடுக்க ரெடி என்றும் கிரீன் சிக்னல் கொடுத்து உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளன. ஜூன் 22 விஜய்யின் பிறந்த நாள் வருவதால் அன்று விஜய் 68 அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
