
நடிகர் விஜய் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் விஜய் இன்று பிறந்த நாள் கொண்டாடி வருகிறார் . இதனையொட்டி சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இதனை தொடர்ந்து இரவு 12 மணிக்கு வெளியான லியோவின் first look விஜய் ரசிகர்களுக்கு கறி விருந்தாக அமைந்துள்ளது .

லோகேஷ் கனகராஜ் நா ரெடி புரோமோ வீடியோவையும் அவர் வெளியிட்டு விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் எனவும் லோகோஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை ஷேர் செய்து நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

செவன் ஸ்கிரின் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் விஜய், அர்ஜூன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரயா ஆனந்த், மன்சூர் அலிகான்,மிஷ்கின், கௌதம் வாசுதேல் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
