தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது.!எடப்பாடி பழனிசாமி ஆவேசம்..!

Advertisements

தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது என்று, எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisements

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில், மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விஷ சாராய மரணம் குறித்து திருச்சியில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாகவும், நாளை மரக்காணம் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூற உள்ளதாகவும் தெரிவித்தார்.  தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், கஞ்சா போன்ற போதைப்பொருட்களை தடை செய்ய வேண்டும் என்றார். மேலும், கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *