மதிமுக வின் அவைத் தலைவராக இருப்பவர் திருப்பூர் துரைசாமி. இவர் கட்சியின்
பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில்
…அன்று திமுகவில் தங்களுக்கு இடர்பாடு வந்தபோது குடும்ப அரசியலுக்கு எதிராக
கொடி பிடித்தீர்கள். தொண்டர்களை தூண்டி விட்டீர்கள் .ஆனால் தற்போது அதற்கு நேர்
எதிர்மறாக தங்கள் குடும்பத்தினருக்கு கட்சியில் பொறுப்பு வழங்க தீர்மானம்
நிறைவேற்றி வருகிறீர்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் குடும்ப மறுமலர்ச்சிக்குத்தான்
என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறீர்கள்.
கடந்த 30 ஆண்டுகளாக உங்களது உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கை மை இழந்த
தொண்டர்கள் ஏராளம். அவர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை
திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது என்று கடிதம்
எழுதி இருந்தார்.
இந்த கடிதம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மதிமுக தலைமை கழகச்
செயலாளர் துரை வைகோ கூறும்போது திமுகவுடன் அதிமுகவை இணைப்பதில்
கட்சியினருக்கு கொஞ்சம் கூட உடன்பாடு கிடையாது. திமுக கூட்டணியில் இருந்தாலும்
மதிமுகவுக்கு என தனிப்பட்ட கொள்கை இருக்கிறது .தனக்குள்ள மனக்கசப்பு காரணமாக
திமுக மதிமுக இணைப்பு என அவைத்தலைவர் துரைசாமி கடிதம் எழுதியிருக்கிறார்
.மூத்த நிர்வாகி என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று
தெரிவித்தார்.
இதனை அடுத்து திருப்பூர் துரைசாமியிடம் துரை.வைகோ பற்றி கேட்டபோது அவர் ஒரு
சின்னப் பையன் அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று கூறிவிட்டார்