மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 18 ஆண்டுகளாக அறங்காவலராக இருந்த கருமுத்து கண்ணன் உடல் நலக்குறைவவால் இன்று காலமானார்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அறங்காவலர் கருமுத்து கண்ணன். இவர் மதுரை தியாகராஜர் கலைக்கல்லூரி, தியாகராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராஜர் மேலாண்மைக் கல்லூரி மற்றும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். மேலும், பல நூற்பாலைகளின் தலைவராகவும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அறங்காவலராக 18 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கருமுத்து கண்ணன், இன்று காலமானார். இவரது இறப்பிற்கு ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருமுத்து கண்ணன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்..!
Advertisements