காலம் எவ்வளவோ நவீனத்திற்கு மாறிவிட்டது .வானொலி .பத்திரிகை. தொலைக்காட்சி ஆகியவற்றையும் தாண்டி தற்போது பேஸ்புக். டுவிட்டர் இன்ஸ்டாகிராம். சமூக வலைத்தளங்கள் என அன்றாட தகவல்களை மின்னல் போல் உலகம் முழுக்க அறிவித்துக் கொண்டிருக்கிறது.
.உலக அரசியல் தலைவர்கள் .சினிமா நட்சத்திரங்கள் என பலரும் ட்விட்டர் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டரில் அவர்கள் தெரிவிக்கும் கருத்தை தான் பத்திரிகைகள். தொலைக்காட்சிகள். இணையதளங்கள் ஆகியவை காப்பியடித்து பொது மக்களுக்கு தெரிவிக்கின்றன .
அந்த வகையில் சமீபத்தில் twitter நிறுவனம் ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது .தனது டுவிட்டரில் தொடர்பு வைத்திருப்பவர்களை மூன்று பிரிவாக பிரித்து அதற்கு மூன்று நிறங்களை தந்து இருக்கிறது .
நீல நிறம் என்பது சரிபார்க்கப்பட்ட நபர்களுக்கும். சாம்பல் நிறம் என்பது அரசியல் தலைவர்களின் கணக்குகளுக்கும் .தங்க நிறம் என்பது தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கும் வழங்கி இருக்கிறது.
இந்த நிலையில் திமுக துணைப்பொதுச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ட்விட்டர் கணக்கிற்கு சாம்பல் நிற குறியீடு நிறுவனம் வழங்கி உள்ளது .இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு மற்றும் உலக அரசியலில் சாம்பல் நிற குறியீட்டைப் பெற்ற முதல் அரசியல் தலைவராக கனிமொழி பதிவாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது