மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலா ஆகியோருக்கு அதிமுகவில் இடமில்லை ! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்ட வட்டம் !

Advertisements

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகம் அதிமுக ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்ததாகவும், தற்போது அமளி பூங்காவாக உள்ளதாகவும் கூறினார். அடுக்கடுக்காக திமுக மீது குற்றச்சாட்டுகளை வைத்த ஜெயக்குமார். யார் கட்டிய கட்டிடத்திற்கு யாருடைய ஸ்டிக்கர் ஒட்டுவது. உப்ப திண்ணவன் தண்ணி குடிச்சே ஆகனும் என்று கூறிய அவர் தமிழகத்தில் எங்கு பார்தாலும் கொலை கொள்ளை அரங்கேறி வருவதாகவும் சட்டம் ஒழுங்கு குறித்து முதலமைச்சர் நடத்திய ஆய்வு கூட்டத்தால் எந்த பலனும் இல்லை என விமர்சித்துள்ளார்.

Advertisements

மேலும் தமிழகத்தில், பெட்ரோல் குண்டு கலாச்சாரம் தலைத்தூக்கியுள்ள நிலையில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாகவும், சாதாரண குடிமக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், மூலகொத்தளம் குடிசை மாற்று வாரிய கட்டிடம், அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது எனவும், அதற்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி தாங்கள் கட்டியதை போல சித்தரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை பாதுகாக்க அரசு பல முயற்சிகளை செய்து வருவதாகவும், உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் என கொந்தளித்தார்.
இந்நிலையில் செந்தில்பாலஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கூறிய ஜெயக்குமார், கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்வது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலா ஆகியோருக்கு அதிமுகவில் இடமில்லை ! பொருந்தாது எனவும் கூறினார்.

திமுக கூட்டணியில் தற்போது கடுமையான அதிருப்தி நிலவி வரும் நிலையில், அடுத்த 9 மாதங்களில் என்ன வேணுமானாலும் நடக்கலாம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொளுத்தி போட்டுள்ளார். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *