நடப்பு ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடி வருபவர்களில் ஜெய்ஷ்வால் இரண்டாம் இடத்திலுள்ளார் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 21 வயது இளம் வீரரான இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரராக ஆடி வருகிறார். இதுவரை ஜெய்ஷ்வால் 14 ஆட்டத்தில் விளையாடி 625 ரன் குவித்துள்ளார். அவரது சராசரி 48.08 ஆகும். ஸ்டிரைக்ரேட் 163.61 ஆக இருக்கிறது.இதில் ஒரு சதமும், 5 அரைசதமும் எடுத்து உள்ளார். 82 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடித்து உள்ள அவர் ஐ.பி.எல்.லில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 2-வது இடத்தில் உள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினால் அவரது ரன் குவிப்பு மேலும் அதிகமாகும். இந்நிலையில் ஐ.பி.எல்.போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஷ்வாலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் கேப்ட னும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சீசனில் ஜெய்ஷ்வால் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் . தொழில்நுட்ப ரீதியான பேட்ஸ்மேனாக இருப்பதோடு . அவர் 20 முதல் 25 பந்தில் 40 முதல் 50 ரன்கள் எடுத்து 15 ஓவர்கள் விளையாடினால் சதம் அடிக்கும் வீரராக உள்ளதாக கூறியுள்ளார் . மேலும் ஜெய்ஷ்வால் 20 ஓவர் போட்டிக்கு தயாராக இருப்பதாகவும் இதனால் இந்திய அணியில் அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்என்று கவாஸ்கர் வலியுரித்துள்ளார் .